கோவிலில் குத்துவிளக்கு திருடிய வாலிபர் கைது


கோவிலில் குத்துவிளக்கு திருடிய வாலிபர் கைது
x

கோவிலில் குத்துவிளக்கு திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

நொய்யல் அருகே கோம்புப்பாளையம் பகுதியில் மதுரை வீரன் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் சாமிக்கு வேண்டுதலை நிறைவேற்றும் போது பக்தர்கள் குத்து விளக்குகளை வாங்கி உபயம் செய்வது வழக்கம். அதேபோல் ஏராளமான குத்துவிளக்குகள் கோவிலில் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோம்புப் பாளையம் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 21) என்பவர் இரவு நேரத்தில் மதுரை வீரன் கோவிலில் உள்ள ஜன்னல் வழியாக ஒரு குச்சியை விட்டு குத்து விளக்கை நகர்த்தி திருடி உள்ளார். அப்போது பொதுமக்களை கண்ட சந்தோஷ்குமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து கோம்புப்பாளையத்தை சேர்ந்த புகழேந்தி என்பவர் கொடுத்த புகாரின்பேரில் சந்தோஷ்குமாரை வேலாயுதம்பாளையம் போலீசார் கைது செய்து, கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கரூர் கிளை சிறையில் அடைத்தனர்.


Next Story