மோட்டார்சைக்கிள் திருடிய வாலிபர் கைது


மோட்டார்சைக்கிள் திருடிய வாலிபர் கைது
x

மோட்டார்சைக்கிள் திருடிய வாலிபர் கைதுசெய்யப்பட்டாா்

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி அம்மன் நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 45). தனியார் நிறுவன உரிமையாளர். சம்பவத்தன்று இவர் தன்னுடைய மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்தபோது அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளை காணவில்லை. யாரோ மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டாா்சைக்கிளை திருடி சென்றவரை வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில் புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தை பகுதியில் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 'அவர் புஞ்சைபுளியம்பட்டி சவுடேஸ்வரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரோகித் (வயது 20) என்பதும், இவர்தான் சத்தியமூர்த்தியின் மோட்டார்சைக்கிளை திருடியதும்,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ரோகித்தை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரோகித் மீது ஈரோடு மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story