மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
x

திருக்காட்டுப்பள்ளியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி:

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள வரகூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது49). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மோட்டார் சைக்கிளை திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையம் அருகே நிறுத்தி விட்டு கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது காணவில்லை. இதுதொடர்ந்து அவர் தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளை தேடினார். அப்போது திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு நிலையம் அருகில் நேற்று முன்தினம் நம்பிராஜன் மோட்டார் சைக்கிளை புதுச்சத்திரம் அங்குரார்தோப்பு பகுதி செல்வகுமார் (32) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.அவரை மோட்டார் சைக்கிளுடன் பிடித்து திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர்.


Next Story