மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
x

ஆம்பூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர்

ஆம்பூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் போலீசார் நகர பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தப்பிஓட முயன்றார்.

உடனே போலீசார் வாலிபரை விரட்டி சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில், ஆம்பூரை அடுத்த நாயக்கனேரி ஊராட்சி சீக்கஜுனை பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 27) என்பதும், ஆம்பூர் முஹம்மத்புரா 2-வது தெருவை சேர்ந்த முகமதுசாதிக் என்பவரின் மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.


Next Story