மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
திருக்கோவிலூரில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது 2 வாகனங்கள் பறிமுதல்
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டில் தொடர்புடையவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை புறவழிச்சாலை அருகே உள்ள அய்யனார்கோவில் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று நடத்திய விசாரணையில் அவர் விழுப்புரம் வண்டிமேட்டு தெருவை சேர்ந்த ஆதாம் மகன் ஷாருக்(வயது 18) என்பதும் திருக்கோவிலூர் பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைதுசெய்த போலீசார் அவரிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.