திருநங்கையிடம் மோட்டார் சைக்கிள், செல்போன் திருடிய வாலிபர் கைது
திருநங்கையிடம் மோட்டார் சைக்கிள், செல்போன் திருடிய வாலிபர் கைது
அய்யம்பேட்டை போலீஸ் சரகம் இலுப்பக்கோரை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று பூமிகா என்ற திருநங்கை கும்பகோணத்திலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பாபநாசம் அருகே மதகரம் மேலத்தெருவை சேர்ந்த அய்ப்பன் (வயது 26) என்பவர் அவருடன் அறிமுகமானார். பின்னர் பூமிகா வீட்டிற்கு ெசன்ற அய்யப்பன், அவர் தூங்கி கொண்டிருந்தபோது அவர் வைத்திருந்த மோட்டார் சைக்கிள், செல்போன், ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை திருடிய அய்யப்பன் அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். இது குறித்து பூமிகா அய்யம்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அய்யம்பேட்டை அருகே மாத்தூரில் அய்யப்பன் பதுங்கியிருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து அங்கே விரைந்த போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மதுபான கடைகள் அருகே போதையில் மயங்கி கிடக்கும் ஆசாமிகளிடம் செல்போன், பணம் ஆகியவற்றை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.