மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது
ஆரல்வாய்மொழி அருகே மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி அருகே மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆரல்வாய்மொழி அருகே தேவசகாயம் மவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் அருள்மணி கென்னடி (வயது 55). கொத்தனாரான இவர் நேற்று முன்தினம் இரவு அவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை தேவசகாயம் மவுண்ட் ஆலயம் முன்பு நிறுத்தி விட்டு அந்த பகுதியில் படுத்து தூங்கி விட்டார். நேற்று காலையில் எழுந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் காணாமல் போனது தெரிய வந்தது. மர்மஆசாமி மோட்டார் சைக்கிளை திருடி சென்று விட்டார். இது குறித்து அருள்மணி கென்னடி போலீசில் புகார் கொடுத்தார்.
இதே போல ஆரல்வாய்மொழி தேவ சகாயம் மவுண்ட் மங்கம்மாள் சாலையை சேர்ந்த ரத்தினசாமி மகன் நவீன் குமார் (23) என்பவரின் மோட்டார் சைக்கிளும் திருடு போனது.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி அடிப்படையில் ஆரல்வாய்மொழி போலீசார் நடத்திய விசாரணையில், நெல்லை மாவட்டம் அண்ணாநகர் கோவில் விளையை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் முகேஷ் (24) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டன.