டிராக்டர்களை திருடிய வாலிபர் கைது


டிராக்டர்களை திருடிய வாலிபர் கைது
x

கைது arrested

திருச்சி

டிராக்டர்களை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டர்.

டிராக்டர்கள் திருட்டு

திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர் மதியழகன் (வயது 53). இவர் திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிகளை மேற்கொள்ளும் வேலை செய்துவந்தார். இந்தநிலையில் கடந்த 23-ந்தேதி மாலை தனது டிராக்டரை தென்னூர் உழவர்சந்தை அருகே நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். மறுநாள் வந்து பார்த்த போது, டிராக்டரை காணவில்லை. இதுபோல் ஏற்கனவே அந்த பகுதியில் நிறுத்தி இருந்த கோமதீஸ்வரன் என்பவரின் டிராக்டரும் கடந்த மாதம் திருட்டு போயிருந்தது.

இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், டிராக்டர்களை திருடியது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விஸ்வநாதனை கைது செய்து 2 டிராக்டர்களையும் மீட்டனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பாராட்டினார்.


Next Story