பள்ளியை சேதப்படுத்தி ஒலிபெருக்கியை எடுத்துச்சென்ற வாலிபர் கைது


பள்ளியை சேதப்படுத்தி ஒலிபெருக்கியை எடுத்துச்சென்ற வாலிபர் கைது
x

கனியாமூர் கலவர வழக்கு பள்ளியை சேதப்படுத்தி ஒலிபெருக்கியை எடுத்துச்சென்ற வாலிபர் கைது

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் கலவரம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை ஆதாரமாக கொண்டு சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து வருகிறார்கள். அந்த வகையில் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் கலவரத்தின் போது பள்ளியை சேதப்படுத்தி, ஒலி பெருக்கியை எடுத்துச்சென்றதாக சங்கராபுரம் தாலுகா கா.செல்லம்பட்டு கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மகன் அஜித்குமார்(வயது 21) என்பவரை சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story