மாற்றுத்திறனாளியை வெட்டிய வழக்கில் வாலிபர் கைது
மாற்றுத்திறனாளியை வெட்டிய வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை
மாற்றுத்திறனாளியை வெட்டிய வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வந்தவாசி தாலுகா நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதன். மாற்றுத்திறனாளியான இவரை நேற்று முன்தினம் 3 பேர் மோட்டார்சைக்கிளில் வந்து வெட்டி விட்டு தப்பினர்.
போைத பொருள் விற்றது குறித்து போலீசாரிடம் தகவல் கூறியதால் ஏற்பட்ட முன்விேராதத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இது குறித்து வரதனின் மனைவி அளித்த புகாரின்பேரில் ஏழுமலை, அவரது மகன்கள் அஜித் (வயது 22), நாகமணி ஆகியோரை தேடி வந்தனர். இந்த நிலையில் அஜித்தை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வரதன் அவருடைய கூட்டாளிகள் விஜய் என்பவரை வெட்டி கொலை செய்ததாகவும் அதற்கு பழிக்கு பழி வாங்க நான் வெட்டினேன் என்று அஜித் கூறியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.