குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே உள்ள ஆத்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னராசு (வயது 33). இவர், ரவுடி போல செயல்பட்டு வீட்டை கொளுத்துவது உள்பட பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தொடர்ந்து அவரை கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, சந்தவாசல் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் கைது செய்து காவலில் வைத்தனர்.

இதனையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கலெக்டர் முருகேசுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் சின்னராசுவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.


Next Story