குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணுக்குடி மேற்கு ஆவுடையார் தெருவை சேர்ந்தவர் கருணாநிதி.

இவருடைய மகன் சின்ராசு என்ற தினேஷ்குமார் (வயது35). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து தினேஷ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் பாப்பாநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், குண்டர் சட்டத்தில் தினேஷ்குமாரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.


Related Tags :
Next Story