போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x

அம்பையில் போக்சோ சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, பெத்தநாயக்கனூர், உப்புக்கிணறு தெருவை சேர்ந்த ராஜசேகர் (வயது 22) என்பவர் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அழைத்துச்சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பாப்பாக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் அம்பை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாமா பத்மினி விசாரணை நடத்தி ராஜசேகரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.


Next Story