போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x

உவாி அருகே போக்சோ சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

திசையன்விளை:

உவரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமியும், திருச்செந்தூர் கடம்பாவிளை பாலம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் ராமன் (வயது 23) என்பவரும், திருச்செந்தூரில் நடந்த நிகழ்ச்சியில் உறவினர் வீட்டில் சந்தித்துள்ளனர். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் செல்போன் மூலமும், வாட்ஸ்-அப் மூலமும் பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் ஆசை வார்த்தை கூறி சிறுமியை, ராமன் கடத்தி சென்றுவிட்டதாக உவரி போலீசில் அவரது பெற்றோர் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து ராமனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.


Next Story