2 துப்பாக்கிகளுடன் வாலிபர் கைது
வத்திராயிருப்பில் 2 துப்பாக்கிகளுடன் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பில் 2 துப்பாக்கிகளுடன் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நாட்டு துப்பாக்கி
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மறவர் தெற்கு தெருவை சேர்ந்தவர், சரவணக்குமார் (வயது 36). இவர் துப்பாக்கிகளுடன் சுற்றித்திரிவதாக வத்திராயிருப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. சப்-இன்ஸ்பெக்டர் விஜயசண்முகநாதன் தலைமையில் போலீசார் அவரது வீட்டிற்கு சென்றனர்.
பின்னர் வீடு முழுவதும் சோதனை நடத்தினர். அப்போது மாடியில் 2 நாட்டு துப்பாக்கிகளும், 21 தோட்டாக்களும், 57 காலி தோட்டாக்களும், அவற்றில் நிரப்புவதற்காக ரசாயன பொருட்களும் இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது
இதையடுத்து அவரை கைது செய்து வத்திராயிருப்பு போலீஸ் நிைலயத்திற்கு அழைத்து வந்தனர். வேட்டையாடுவதற்காக துப்பாக்கியை பயன்படுத்தினாரா அல்லது எதற்காக அவர் துப்பாக்கி வைத்திருந்தார்? என அவரிடம் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் துப்பாக்கி யாரிடம் வாங்கினார், இவருடன் தொடர்பில் உள்ளவர்கள் யார்? என்பதை அறியவும் விசாரணை நடந்து வருகிறது. கைதான சரவணக்குமார் ஏற்கனவே 2018-ம் ஆண்டு துப்பாக்கி வைத்திருந்ததாக கைதாகி சிறையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.