ஆந்திராவிற்கு கடத்த இருந்த ரேஷன் அரிசியுடன் வாலிபர் கைது


ஆந்திராவிற்கு கடத்த இருந்த ரேஷன் அரிசியுடன் வாலிபர் கைது
x

ஆந்திராவிற்கு கடத்த இருந்த ரேஷன் அரிசியுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆந்திராவிற்கு கடத்த இருந்த ரேஷன் அரிசியுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஆரணி நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன், உணவு குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீஸ்காரர்கள் குமார், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அவர்கள் ஆரணி - தேவிகாபுரம் நெடுஞ்சாலையில் வடுகசாத்து அருகே வந்தவேனை சோதனையிட்டபோது அதில் 18 மூட்டைகளில் 630 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது.

இது சம்பந்தமாக ஆகாரம் கிராமத்தைச் சேர்ந்த துளசி (வயது 21) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த ரேஷன் அரிசி பறிமுதல் செய்து உணவு வாணிபக் கிடங்குக்கு அரிசியை அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறன்றனர்.



Next Story