மண்வெட்டியால் தாக்கி வாலிபர் கொலை
மண்டபத்தில் மண்வெட்டியால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தந்தை உள்பட 2 பேரை கைது செய்தனர்.
பனைக்குளம்,
மண்டபத்தில் மண்வெட்டியால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தந்தை உள்பட 2 பேரை கைது செய்தனர்.
வாலிபர் கொலை
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் எம்.ஜி.ஆர்.காலனியைச் சேர்ந்தவர் குருசாமி. இவருடைய மகன் முருகேசன் (வயது 28).இவர் சம்பவத்தன்று இரவு மது குடித்த நிலையில் வீட்டிற்கு வந்தார். அன்று இரவு வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்து அனைவரையும் முருகேசன் அடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த குருசாமி வீட்டில் இருந்த மண்வெட்டியை எடுத்து முருகேசன் கழுத்தின் பின்புறத்தில் தாக்கினார். முருகேசனின் சகோதரர் ராமதாஸ் மண்வெட்டி கணையால் கழுத்தின் பின்புறம் அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தந்தை-மகன் கைது
இது குறித்த தகவலின் பேரில் முருகேசன் உடலை மண்டபம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக குருசாமி (55), ராமதாஸ் (26) ஆகிய 2 பேரையும் மண்டபம் போலீசார் கைது செய்து ராமேஸ்வரம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறை காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.