இரும்பு கம்பியால் அடித்து வாலிபர் கொலை


இரும்பு கம்பியால் அடித்து வாலிபர் கொலை
x

இரும்பு கம்பியால் அடித்து வாலிபர் கொலை

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை,

பட்டுக்கோட்டை அருகே முன்விரோதம் காரணமாக இரும்பு கம்பியால் அடித்து வாலிபர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தொழிலாளி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த சாந்தாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் சுரேஷ்(வயது 35). இவர் அதே பகுதியில் உள்ள ஒருவருடைய வீட்டு வாசலில் நேற்று காலை 9 மணியளவில் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

இது குறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் போலீசார் சுரேஷ் உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

இரும்பு கம்பியால் அடித்துக்கொலை

விசாரணையில் முன்விரோதம் காரணமாக சுரேசை அதே பகுதியை சேர்ந்த தியாகராஜன் மகன் மாணிக்கவேல்(27) இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றது தெரிய வந்தது. கொலை செய்யப்பட்ட சுரேஷ் அடிக்கடி வெளியூரில் சுற்றி விட்டு எப்போதாவது ஊருக்கு வருவாராம். நேற்று முன்தினம் சுரேஷ் ஊருக்கு வந்துள்ளார். நேற்று அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பெண் தகராறு காரணமாக இந்த கொலை நடந்து இருப்பதாக தங்களது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தொழிலாளி கைது

இந்த கொலை தொடர்பாக பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் மாணிக்கவேல் சரண் அடைந்தார். தொழிலாளியான அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story