நாசரேத்தில் வாலிபர் தற்கொலை


நாசரேத்தில் வாலிபர் தற்கொலை
x

நாசரேத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

நாசரேத்:

நாசரேத் மில் ரோட்டை சேர்ந்த நாகமணி மகன் நாராயணன் (வயது 25). கூலி தொழிலாளி. இவருக்கு பல்வேறு இடங்களில் பெண் பார்த்துள்ளனர். ஆனால் எந்த வரனும் சரியாக அமையாததால் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டுள்ளார். கடந்த 10-ந்தேதி மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார். இதில் மயங்கி கிடந்த நாராயணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாய் முத்துலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் நாசரேதி சப்- இன்ஸ்பெக்டர் ராய்ட்சன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Next Story