தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி ராமலிங்கா நகரை சேர்ந்தவர் மாரியம்மாள். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 22). இவர் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் மாரியம்மாள் அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மணிகண்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story