தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
போடி அருகே மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேனி
போடியை அடுத்த நாகலாபுரத்தை சேர்ந்தவர் சுகுமார் (வயது 35). இவர் உரம் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி யோகா (29). இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் யோகா, சுகுமாரை விட்டு பிரிந்து மகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனைவி பிரிந்து சென்றதால் கடந்த சில நாட்களாகவே சுகுமார் விரக்தியில் இருந்து வந்தார்.
இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது சுகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அவரது தாய் சவுடம்மாள், போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story