தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x

அருப்புக்ேகாட்டை அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகே சொக்கலிங்கபுரம் உஜ்ஜி சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் கணேஷ் (வயது 36). உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சங்கர் கணேஷ் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி பானுப்ரியா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story