தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
கும்பகோணம் அருகே உள்ள கொத்தங்குடி மேலத்தெருவை சேர்ந்த தங்கவேல் மகன் வினோத்(வயது25). இவரும், திருமணமான பெண் ஒருவரும் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் ஒரு தனியார் நூல் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதனை வினோத்தின் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இந்தநிலையில் தீபாவளி விடுமுறைக்காக ஊருக்கு வந்த வினோத் வாட்ஸ் அப் மூலம் அந்த பெண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு கொத்தங்குடி திருமலைராஜன் ஆற்று கட்டுகரையில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த நாச்சியார் கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வினோத் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி நாச்சியார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.