தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
ஆலங்குடி அருகே பள்ளத்திவிடுதியை சேர்ந்தவர் ராஜா மகன் ராஜ்குமார் (வயது 24). இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்தநிலையில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு இவரது தந்தை உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். வயிற்று வலியும், தந்தை இறந்த சோகமும் தாங்காமல் மனமுடைந்த நிலையில் அவர் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் உத்திரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ராஜ்குமார் கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இதுகுறித்து ஆலங்குடி போலீசாருக்கு தகவல் ெகாடுத்தனர். தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்த புகாரின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்ைம வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.