தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x

சிங்கம்புணரியில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி காசியா பிள்ளை நகரை சேர்ந்தவர் முருகபூபதி. இவரது மூத்த மகன் பிரசன்னா (வயது 25). எலக்ட்ரீசியன். இந்த நிலையில் பிரசன்னா உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்து உள்ளார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் பிரசன்னா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில் சிங்கம்புணரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story