தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
தஞ்சை மானம்புச்சாவடி சிவராயர் தோட்டத்தை சேர்ந்தவர் ராம் பிரசன்னா (வயது 23). இவர் சிலரிடம் கடன் வாங்கி அதனை பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளார். ஆனால் இவருக்கு அதில் பணம் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கடன் கொடுத்தவர்கள் ராம் பிரசன்னாவிடம் கடனை திருப்பி தொடர்ந்து கேட்டு வந்தனர். கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவர் தவித்து வந்தார். இதனால் மனமுடைந்த ராம் பிரசன்னா வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire