தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 16 Feb 2023 12:30 AM IST (Updated: 16 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் ராணுவத்தில் சேர முடியாததால் மனமுடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேனி

கம்பம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி முருகேஸ்வரி. இவர்களுக்கு கரண் (வயது 30) ஹரிஹரன் (23) என்ற 2 மகன்கள் உள்ளனர். செங்கல்பட்டில் முருகேஸ்வரியும், கரணும் வசித்து வருகின்றனர். ஹரிஹரன் கம்பத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்கி கூடலூரில் உள்ள தனியார் ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் ராணுவத்தில் ஒரு சில பிரிவுகளுக்கு வயது வரம்பு குறைக்கப்பட்டதாக தெரிகிறது. இதையறிந்த ஹரிஹரன் சேர முடியாமல் போய்விடுமோ என்று மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஹரிகரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story