தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
ேபாடியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேனி
போடி டி.வி.கே.கே. நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 23). இவர், பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி பவித்ரா (23). நேற்று முன்தினம் கார்த்திக் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போடி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story