தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
தஞ்சாவூர்
பாபநாசத்தில் 108 சிவாலயம் தோப்பு தெருவில் வசித்து வருபவர் அய்யப்பன் (வயது 70). இவரது மகன் சிவகுரு (29). கடந்த சில மாதங்களாகவே இவர் வீட்டில் உள்ளவர்கள் தனக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என மன உளைச்சலில் இருந்தார். சம்பவத்தன்று பாபநாசம் 108 சிவாலயம் சுடுகாட்டிற்கு அருகில் உள்ள மரத்தில் சிவகுரு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அய்யப்பன் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, சப்-இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவகுரு உடலை கைப்பற்றி பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாபநாசம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story