தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி அருகே உள்ள அனுப்பன்குளம் சத்யாநகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 34). இவருக்கும் உறவினர் மகள் ஆனந்தி என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்தநிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் ரமேஷ், ஆனந்திக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு ரமேசை விட்டு ஆனந்தி பிரிந்து சென்று விட்டதாக கூறப்படு கிறது. ரமேஷ் மற்றும் அவரது மகன் இருவரும் தந்தை முத்துசாமி பராமரிப்பில் இருந்து வந்தனர். இந்த நிலையில் பட்டாசு தொழிலில் ரமேசுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் வீட்டில் தூக்குப்போட்டு ரமேஷ் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முத்துசாமி சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story