இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

பாளையங்கோட்டையில் இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
பாளையங்கோட்டை:
நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில், பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் போத்திராஜ் தலைமை தாங்கினார். ஓ.பி.சி. பிரிவு மாநில துணைத்தலைவர் வக்கீல் காமராஜ் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு மத்திய அரசு விற்பனை செய்வதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன், பொருளாளர் ராஜேஷ் முருகன், பொதுக்குழு உறுப்பினர் உதயகுமார், பஞ்சாயத்து ராஜ் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் தனசிங், இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் ராஜீவ்காந்தி, நிர்வாகிகள் வெங்கடேஷ் தன்ராஜ், ராஜ்குமார், ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
* தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் பக்தவச்சலம் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பக்தவச்சலம் அறக்கட்டளை அறங்காவலர் சண்முகவேலன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் கலந்து கொண்டு பக்தவச்சலம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், பொதுக்குழு உறுப்பினர் உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






