இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்
நெல்லையில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
நெல்லையில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நேற்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் போத்திராஜ் வினோத் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர்கள் அஸ்வத்தாமன், பியூலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் ஜெகநாதன் வரவேற்றார்.
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு லெனின் பிரசாத், முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் பேசினார்கள்.
கூட்டத்தில் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து நடைபயணத்தை தொடங்கும் ராகுல்காந்தி நிகழ்ச்சியில் நெல்லை மாவட்டத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் நெல்லை தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, ஓ.பி.சி. பிரிவு மாநில துணைத்தலைவர் வக்கீல் காமராஜ், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் பாராளுமன்ற தொகுதி தலைவர் வி.பி.துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு லெனின் பிரசாத்துக்கு வண்ணார்பேட்டையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்குள்ள முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.