இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x

கோபால்பட்டியில் இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உருவ படம் எரிக்கப்பட்டது.

திண்டுக்கல்


திண்டுக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி குறித்து அவதூறாக பேசியதாக கூறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து கோபால்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் சீமானை கண்டித்து இளைஞர் காங்கிரசார் கோஷங்களை எழுப்பினர். மேலும் அவரது உருவ படத்தை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் சகாயராஜ், நத்தம் தொகுதி தலைவர் சுடர்வண்ணன், துணை தலைவர் வேளாங்கண்ணி, சாணார்பட்டி தெற்கு வட்டார தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பொறுப்பாளர்கள் மச்சக்காளை, பொட்டுசெல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story