இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x

விழுப்புரத்தில் சீமானை கண்டித்து இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் மத்திய மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை அவதூறாக பேசிவரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஸ்ரீராம் தலைமை தாங்கினார். விழுப்புரம் சட்டமன்ற தொகுதி தலைவர் பிரபாகரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.டி.வி. சீனிவாசகுமார், மாநில செயலாளர் தயானந்தம், விழுப்புரம் நகர காங்கிரஸ் தலைவர் செல்வராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதில் மாவட்ட துணைத் தலைவர்கள் ராஜ்குமார், நாராயணசாமி, மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேஷ், கோலியனூர் ஒன்றிய நரையூர் கவுன்சிலர் வேலு, வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் ரமேஷ், சமூக ஊடகத்துறை மாவட்ட பொதுச்செயலாளர் சாந்தராஜா, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் சந்தானகிருஷ்ணன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் விஜயகுமார், ரவிக்குமார், கிருஷ்ணகுமார், ஸ்ரீகாந்த், கோபிநாத், ராமகிருஷ்ணன், விழுப்புரம் சட்டமன்ற துணை தலைவர்கள் ராஜமாணிக்கம், மனோகர், வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டு சீமானுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பப்பட்டு அவரின் உருவபொம்மையை தீவைத்து எரித்தனர்.

1 More update

Next Story