வாலிபர் சாவில் திருப்பம்: கம்பியால் தாக்கி கொன்றுவிட்டு தற்கொலை நாடகமாடிய தந்தை கைது


வாலிபர் சாவில் திருப்பம்:  கம்பியால் தாக்கி கொன்றுவிட்டு தற்கொலை நாடகமாடிய தந்தை கைது
x

சின்னமனூரில் வாலிபர் சாவில் திருப்பமாக தந்தையே கம்யியால் தாக்கி கொன்றுவிட்டு தற்கொலை நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

தூக்கில் பிணம்

தேனி மாவட்டம் சின்னமனூர் காந்திநகர் காலனியை சேர்ந்தவர் அய்யாச்சாமி (வயது 52). இவரது மகன் மூவேந்திரன் (30). வீட்டு உபயோக பொருட்களை தவணை முறையில் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இந்நிலையில் இவரது தம்பி அரவிந்தனுக்கு நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன்பு மூவேந்திரனுக்கும், அவரது தந்தைக்கும் இ்டையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் திருமணத்திற்கு சென்று வந்தபோது மூவேந்திரன் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

கைது

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சின்னமனூர் போலீசார் மூவேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூவேந்திரன் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவருடைய தந்தை முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை கைது செய்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், தனக்கு திருமணம் செய்யாமல் தம்பிக்கு மட்டும் திருமணம் செய்வதாக கூறி மூவேந்திரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த மூவேந்திரன் அய்யாச்சாமியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அய்யாச்சாமி, மூவேந்திரனை கம்பியால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

நாடகமாடிய தந்தை

இதனையடுத்து அய்யாச்சாமி மூவேந்திரனை தூக்கில் தொங்கவிட்டுள்ளார். மறுநாள் காலையில் எதுவும் நடக்காததுபோல் இளைய மகன் அரவிந்தன் திருமணத்தை நடத்தியுள்ளார்.

பின்னர் வீட்டிற்கு வந்து மூவேந்திரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களை நம்ப வைப்பதற்காக அய்யாச்சாமி நாடகம் ஆடியுள்ளார் என்று அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறினர்.


Next Story