மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி


மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
x

ஓட்டப்பிடாரம் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் ஆலயங்கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் பாலாறு (வயது 30). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவில் மாரியப்பன், பாலாறு ஆகிய 2 பேரும் தங்களது வீட்டின் மொட்டை மாடியில் தூங்கினர். நள்ளிரவில் சிறுநீர் கழிப்பதற்காக சென்ற பாலாறு எதிர்பாராதவிதமாக மொட்டை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பாலாறை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாலாறுவின் கண்களை தானம் செய்வதாக பெற்றோர் தெரிவித்தனர். மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story