வாலிபர் பலி


வாலிபர் பலி
x

குத்தாலம் அருகே மோட்டார் சைக்கிள்- ஆட்டோ ேமாதிக்கொண்ட விபத்தில் வாலிபர் இறந்தார்.

மயிலாடுதுறை

குத்தாலம்;

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, குச்சிபாளையம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராமன். இவருடைய மகன் ராஜசேகர்(வயது25). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மொபட்டில் சென்ற போது திருவாவடுதுறை பகுதியில் இருந்து எதிரே வந்த ஆட்டோ, மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராஜசேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த குத்தாலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராஜசேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவர் கரைகண்டம் கிராமத்தை சேர்ந்த ஜெர்லின் அந்தோணிராஜ் (40) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்


Next Story