சரக்கு வேன் மோதி வாலிபர் பலி
ஆண்டிப்பட்டி அருகே சரக்குவேன் மோதி வாலிபர் பலியானார்.
தேனி
ஆண்டிப்பட்டி அருகே உள்ள திருமலாபுரம் கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் விஜய் (வயது 25). நேற்று முன்தினம் இரவு இவர், திருமலாபுரத்தில் இருந்து மோட்டார்சைக்கிளில் மதுரைக்கு சென்று கொண்டிருந்தார். தேனி - மதுரை நெடுஞ்சாலையில் சக்கம்பட்டி, ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்றபோது எதிரே வந்த சரக்கு வேன், இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு வேன் டிரைவரான ஆண்டிப்பட்டி நாடார் தெருவை சேர்ந்த ராஜபாண்டி (38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story