கல்குவாரி குட்டையில் மூழ்கி வாலிபர் பலி
கல்குவாரி குட்டையில் மூழ்கி வாலிபர் பலியானார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே லிங்கமநாயக்கன்பட்டியை சேர்ந்த முருகன். இவரது மகன் பிரகாஷ் (வயது 24). கொத்தனாரா இவர், நேற்று காலை தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள ஒரு கல்குவாரி குட்டைக்கு குளிப்பதற்காக சென்றார். பின்னர் நண்பர்களுடன் குட்டையில் இறங்கி பிரகாஷ் குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பிரகாஷ் தண்ணீர் மூழ்கினார். இதையடுத்து சக நண்பர்கள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என சத்தம் போட்டனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் குட்டையில் இறங்கி நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு பிரகாசை பிணமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து அவரது உடலை அரவக்குறிச்சி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பிரகாசின் தந்தை முருகன் கொடுத்த புகாரின்பேரில், அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.