மோட்டார் சைக்கிள் ஓடைக்குள் பாய்ந்து வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் ஓடைக்குள் பாய்ந்து வாலிபர் பலி
x

குளச்சல் அருகே சாலையில் விபத்தில் சிக்கியவர்கள் மீது மோதாமல் இருக்க மோட்டார்சைக்கிளை திருப்பியபோது ஓடைக்குள் பாய்ந்து மணல் ஆலை ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி

குளச்சல்:

குளச்சல் அருகே சாலையில் விபத்தில் சிக்கியவர்கள் மீது மோதாமல் இருக்க மோட்டார்சைக்கிளை திருப்பியபோது ஓடைக்குள் பாய்ந்து மணல் ஆலை ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

மணல் ஆலை ஊழியர்

மணவாளக்குறிச்சி அரசு பள்ளிக்கூடம் பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட். இவருடைய மகன் ரோகன் (வயது 19). பாலிடெக்னிக் படித்து விட்டு மணவாளக்குறிச்சி ஐ.ஆர்.இ.எல். மணல் ஆலையில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை ரோகன் மோட்டார் சைக்கிளில் திங்கள்நகரில் இருந்து குளச்சல் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

ஓடைக்குள் பாய்ந்தது

லட்சுமிபுரம் சந்திப்பு அருகே சென்றபோது, ரோகனுக்கு முன்னால் சென்ற 2 மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் அதில் வந்தவர்கள் சாலையில் விழுந்து கிடந்தனர். இதைக்கண்ட ரோகன் அவர்கள் மீது மோதமலிருக்க மோட்டார் சைக்கிளை திடீரென சாலையோரமாக திரும்பினார். அப்போது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த ஓடைக்குள் பாய்ந்தது.

இதில் ரோகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரோகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சோகம்

இந்த சம்பவம் குறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் சிக்கியவர்கள் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை திருப்பியபோது ஓடைக்குள் பாய்ந்து மணல் ஆலை ஊழியர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story