வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை


வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை
x

சீர்காழி அருகே மதுக்கடையை சேதப்படுத்தி விற்பனையாளர் மீது தாக்குதல் நடத்திய வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

மயிலாடுதுறை


சீர்காழி அருகே மதுக்கடையை சேதப்படுத்தி விற்பனையாளர் மீது தாக்குதல் நடத்திய வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

கடனுக்கு மது கேட்டு தகராறு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா மங்கைமடம் கிராமத்தில் மதுக்கடை உள்ளது. இந்த மதுக்கடையில் விற்பனையாளராக பூபதி என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 3-ந் தேதி பணியில் இருந்தார்.அப்போது நாங்கூர் மேலத்தெருவை சேர்ந்த இலக்கியராஜ் (வயது 34) என்பவர் பூபதியிடம் கடனுக்கு மதுபாட்டில் கேட்டுள்ளார். பூபதி கடனுக்கு மது கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இலக்கியராஜ், கடையில் இருந்த மது பாட்டில்களை உடைத்து சேதப்படுத்தியதோடு விற்பனையாளர் பூபதியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

7 ஆண்டுகள் சிறை

இதுகுறித்து திருவெண்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இலக்கியராஜை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை மயிலாடுதுறை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. இதில் இலக்கியராஜுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி இளங்கோ உத்தரவிட்டார்.


Next Story