அரசு பஸ் மோதி வாலிபர் படுகாயம்


அரசு பஸ் மோதி வாலிபர் படுகாயம்
x

அரசு பஸ் மோதி வாலிபர் படுகாயம் அடைந்தார்.

கரூர்

கரூர் சின்னஆண்டாங்கோவில் அருகே ஒத்தை பனைமரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி கலைமதி (வயது 35). இவர்களுடைய மகன் கோகுல் (18). இந்தநிலையில் கோகுல் தனது தாயாருடன் கரூரில் இருந்து நாமக்கலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பாலத்துறை பிரிவு அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்து இருந்த கலைமதி எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த கோகுல் மோட்டார் சைக்கிளை வலது புறமாக திருப்பி உள்ளார். அப்போது கரூரில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கோகுல் மற்றும் அவருடைய தாயார் கலைமதி பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்கள் 2 பேரையும் மீட்டு கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story