தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது


தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
x

கும்பகோணம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம்:

கும்பகோணம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

தனிப்படை

கும்பகோணம் பகுதியில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ்ராவத் உத்தரவின் பேரில், கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு கீர்த்திவாசன் மேற்பார்வையில் கும்பகோணம் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார், ஏட்டு பாலசுப்ரமணியம், நாடிமுத்து, ஜனார்த்தனன், செந்தில்குமார், ராஜ்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

கண்காணிப்பு

இந்த தனிப்படை குழுவினர் கும்பகோணம் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபடும் குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதில் கும்பகோணம் அண்ணலக்ரஹாரம் கொல்லன் திடல் பகுதியை சேர்ந்த அன்பழகன் மகன் பாலகுரு (வயது 26) என்பவரை சந்தேகத்தின் பேரில்பிடித்து விசாரணை நடத்தினர்.

வாலிபர் கைது

விசாரணையில் பாலகுரு கும்பகோணம் பகுதியில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து பாலகுருவிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து கும்பகோணம் கிளை சிறையில் அடைத்தனர்.


Next Story