வாலிபர் வெட்டிக்கொலை


வாலிபர் வெட்டிக்கொலை
x

ஊத்துமலை அருகே கோவில் திருவிழாவில் பங்கேற்று திரும்பிய வாலிபர் வெட்டிக்கொைல செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

தென்காசி

ஆலங்குளம்:

ஊத்துமலை அருகே கோவில் திருவிழாவில் பங்கேற்று திரும்பிய வாலிபர் வெட்டிக்கொைல செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

வாலிபர்

நெல்லை பேட்டை எம்.ஜி.ஆர். நகர் தங்கம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் சேதுபதி (வயது 20).

இவர் தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே கருவந்தாவில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் இரவு அங்குள்ள கோவிலில் நடைபெற்ற திருவிழாவுக்கு அவர் சென்றார்.

வெட்டிக்கொலை

நள்ளிரவில் திருவிழாவை பார்த்து விட்டு சேதுபதி வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம கும்பல் திடீரென்று சேதுபதியை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் சேதுபதி பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சேதுபதி பரிதாபமாக இறந்தார்.

உடலை வாங்க மறுப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த ஊத்துமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பி ஓடிய மர்ம கும்பலை வலைவீசி தேடிவருகிறார்கள்.

இதற்கிடையே, குற்றவாளிகளை கைது செய்யும் வரை சேதுபதி உடலை வாங்க மாட்டோம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர். ஊத்துமலை அருகே கோவில் திருவிழாவுக்கு சென்ற வாலிபர் வெட்டிக் கொைல செய்யப்பட்ட பயஙகர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story