இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்


இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
x

நெல்லை சந்திப்பில் இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், அதானியின் சொத்துக்களை பறிமுதல் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் லட்சுமணன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொது செயலாளர் சடையப்பன், இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் சந்தனமுத்து ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்தப் போராட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.


Next Story