சவால்களை எதிர்கொள்ள இளைஞர்கள் தயாராக வேண்டும் - மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் வேண்டுகோள்


சவால்களை எதிர்கொள்ள இளைஞர்கள் தயாராக வேண்டும்  - மத்திய மந்திரி அனுராக்  தாக்கூர் வேண்டுகோள்
x

உலக அளவில் சவால்களை எதிர்கொள்ள இளைஞர்கள் தயாராக வேண்டும் என, மத்திய மந்திரி அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

உலக அளவில் சவால்களை எதிர்கொள்ள இளைஞர்கள் தயாராக வேண்டும் என, மத்திய மந்திரி அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த பரங்கிமலையில் யுனிசெப் சார்பில் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு இளைஞர்களின் தாக்கம் குறித்தான கருத்தரங்கு நடைபெற்றது கருத்தரங்கில் பேசிய மத்திய மந்திரி அனுராக் சிங் தாக்கூர், உலக அளவில் சவால்களை எதிர்கொள்ள இளைஞர்கள் தயாராக வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நிறைவேறக்கூடிய இலக்குகளை நிர்ணயித்து நாட்டைக் கட்டமைப்பதில் இளைஞர்கள் பங்கு கொள்ள வேண்டும் என்றார். இன்றைய உலகம் எதிர்கொள்ளும் சவால்களை திறம்பட எதிர்கொண்டு அவற்றை வெற்றி காண்பதில் இளைஞர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும் என அனுராக் சிங் தாக்கூர் கூறியுள்ளார்.




Next Story