இளைஞர் திறன் பயிற்சி திருவிழா
வந்தவாசியில் இளைஞர் திறன் பயிற்சி திருவிழா நடந்தது.
திருவண்ணாமலை
வந்தவாசி
வந்தவாசியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் இளைஞர் திறன் பயிற்சி திருவிழா வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் நடந்த இந்த விழாவில், வேலைவாய்ப்புடன் கூடிய தொழில்திறன் பயிற்சி பெற 500 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
விழாவுக்கு மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் திட்ட இயக்குனர் சையத் சுலைமான் தலைமை தாங்கினார்.
உதவித் திட்ட அலுவலர்கள் ரவிச்சந்திரன், சகாயம் வில்லியம்ஸ், ஜான்சன், வட்டார மேலாளர் ஆனந்தன் உள்ளிட்டோர் திறன் பயிற்சி பெற உள்ள இளைஞர்களை தேர்வு செய்தனர்.
மேலும் திறன் பயிற்சி பெற்று முடித்த இளைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
முடிவில் ஒருங்கிணைப்பாளர் சாந்தி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story