நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் இளைஞர் திறன் விழா


நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் இளைஞர் திறன் விழா
x

தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் இளைஞர் திறன் விழா நடந்தது.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், நெல்லை மாவட்டம் மற்றும் வேலைவாய்ப்பு மையம், அகத்தர மதிப்பீட்டு குழு இணைந்து நடத்தும் "இளைஞர் திறன் திருவிழா" என்ற தலைப்பில் அரசு நிதி உதவியில் கட்டணமில்லா பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. மகளிர் திட்ட இயக்குனர் சாந்தி வரவேற்றார். மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

சபாநாயகர் மு.அப்பாவு பயிற்சி நியமன ஆணைகளை வழங்கி பேசினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி மற்றும் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் வி.பி.ராமநாதன், கல்லூரி முதல்வர் ராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மகளிர் திட்டத்தின் உதவி திட்ட அலுவலர் சாமத்துரை நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 421 பேர் பங்கேற்று 102 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட கவுன்சிலர் ஜான்ஸ் ரூபா கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அகத்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ், வேலைவாய்ப்பு மையம் ஒருங்கிணைப்பாளர் ஹரிபிரகாஷ், முருகவேல் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story