சாராயம் கடத்திய வாலிபர் கைது
கீழ்வேளூர் அருகே சாராயம் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சிக்கல்:
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் மாவட்டத்தில் 8 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ்நிலையில் கீழ்வேளூர் கச்சனம் சாலை சந்திப்பில் கீழ்வேளூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கீழ புழுதிக்குடி வடக்கு தெருவை சேர்ந்த சின்னப்பன் மகன் குருமூர்த்தி (வயது 24) என்பதும், அவர்காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து குருமூர்த்தியை கைது செய்து அவரிடம் இருந்து 55 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.