சாராயம் கடத்திய வாலிபர் கைது


சாராயம் கடத்திய வாலிபர் கைது
x

செம்பனார்கோவில் அருகே சாராயம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

செம்பனார்கோவில் பகுதியில் நேற்று முன்தினம் செம்பனார்கோவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கூடலூர் கிராமம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரின் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த மூட்டையை பிரித்துப் பார்த்தபோது அதில் சாராயம் இருந்தது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர், காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு செருமாவிலங்கை கிராமம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த பக்கிரிசாமி மகன் வீரமணி (வயது26) என்பதும், காரைக்கால் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து செம்பனார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.


Next Story